T. Deepan

Dear Pastor,
நான் Bangalore-லிருந்து தீபன் எழுதுகிறேன். Pastor எனக்கு 27-04-2015 அன்று வேலை பறிபோனது. 14-05-2016 இன்று வேலை திரும்பவும் கிடைத்துள்ளது. ஆனால் என்னுடைய பழைய சம்பளம் சுள. Rs. 36,000 /- இப்பொழுது என்னுடைய சம்பளம ; 12,000/- மட்டுமே. நான் கர்த்தரிடத்தில் பொருத்தனை செய்திருந்தேன். என்னுடைய முதல் மாத சம்பளத்தை சீயோன் விசுவாச தேவாலயத்திற்கு கொடுக்கவேண்டுமென்று பொருத்தனை செய்திருந்தேன். எனக்கு முதல் மாதம் சுள. 5,855/- மட்டுமே சம்பளம் கொடுத்தார்கள். அதை உங்களுக்கு அனுப்பி உள்ளேன்.

உங்களைப்பற்றி ஒரு சொப்பனம் கண்டேன். கடந்த வருடம் உங்கள் நெஞ்சுப் பகுதியை சுற்றி வெட்டி வைக்கப்பட்ட மாமிச துண்டுகளை பார்த்தேன். என்னவென்று எனக்கு தெரியவில்லை.
இன்னொரு சொப்பனத்தில் நீங்கள் என் தலையில் கை வைத்து ஜெபித்து, “இப்பொழுது என்ன தரிசனம் கண்டாய் என்று கேட்டீர்கள், அதற்கு நான் பாழாய் போன ஒரு வீடு காண்கிறேன்
என்றேன். அதற்கு நீங்கள் சீக்கிரத்தில் பரிசுத்தப்படுத்திக் கொள் உன்னை” என்று விளக்கம் கொடுத்தீர்கள்.  நீங்கள் சொப்பனத்தில் வந்து சொன்ன காரியத்திற்காக வேதாகமத்தை அதிகமாக படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய பரிசுத்தத்தை காத்துக்கொள்ள வேதாகம வாசிப்பு அதிக உதவியாக உள்ளது.

11-06-2016 அன்று சொப்பனத்தில் திரும்பவும் எங்கள் வீட்டிற்கே நீங்கள் பேருந்தில் வந்து வீட்டு ஜெபம் நடத்தினீர்கள். அதாவது பெரம்பலூர் வந்து ஜெபம் நடத்தினீர்கள். இப்பொழுது எங்கள்
வீட்டில் ஒரு விதமான சந்தோஷ சமாதானம் நிலவுகிறது.  நாங்கள் உங்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க வருகிறோம்.
இப்படிக்கு
T. Deepan
E-mail ID : deepan_antony@yahoo.co.in