இந்த சாட்சி கடிதம் MS படித்த மருத்துவரால் எழுதப்பட்டது

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு:

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்தக் கடிதத்தை சாட்சியாக எழுதுகிறேன். என்னுடைய உறவினருடைய 18 வயது பையன் (4th June 2016) பைக்கில் செல்லும் போது, விபத்துக்குள்ளாகி, Head Injuryல் மிகவும் கவலைக்கிடமான சூழ்நிலையில், தேனியிலிருந்து, மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் admit பண்ணினோம் Doctors யாருமே உயிருக்கு உத்திரவாதம் கொடுக்கவில்லை. Head Injury என்பதால் காதிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இரத்த வாந்தி வேற எடுத்துக் கொண்டிருந்தான். அந்த சூழ்நிலையில் நாங்கள் கர்த்தரை மட்டுமே நம்பி ஜெபித்துக்கொண்டிருந்தோம். hospitalலில் admit பண்ணிவிட்டு இரவு வீட்டிற்கு வந்தவுடன் T.V. on பண்ணி Sathiyam Channel பார்த்தோம். நேரம் 12.15 a.m. என்பதால் உங்களுடைய நிகழ்ச்சியை பார்த்தோம். T.V. on பண்ணியவுடன் நீங்கள் உங்கள் Speech நடுவில், இந்த T.V. நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சகோதரருடைய உறவினர் பையன், Bike accident ல் சிக்கி, (I.C.U.) Hospitalலில் உயிருக்குப் போரடிக் கொண்டிருக்கிறான். கர்த்தர் அவனை இந்த நிமிடம் தொட்டு சுகமாக்குகிறார் என்று தீர்க்கதரிசனமாக சொன்னீர்கள். அவன் சுகமானவுடன் எங்களுக்கு சாட்சியாக கடிதம் எழுதுங்கள் என்றும் சொன்னீர்கள். அந்த வார்த்தை எங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

அவன் மிகவும் அதிசயிக்கத்தக்க விதமாக brain surgery எதுவுமில்லாமல் கர்த்தருடைய கிருபையால், சுகமாக ஆரம்பித்து விட்டான். மூன்றாவது நாள் முழு நினைவு வந்து விட்டது. காலிலும், கையிலும் மட்டும் எலும்பு முறிவிற்காக surgery பண்ணி 23rd June discharge ஆகி வீட்டிற்க்கு சென்றுவிட்டான். கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

அந்தக் குடும்பத்திற்கு கர்த்தர் செய்த அற்புதத்தையும், உங்கள் T.V. நிகழ்ச்சி மூலமாக கர்த்தர் பேசியதையும் எழுதியுள்ளோம். கர்த்தர் செய்த பெரிய அற்புதத்திற்க்காக கோடான கோடி நன்றிகள்.

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.

அன்பு சகோதரர்