நீங்களும் திறப்பின் வாசலைச் சந்திக்கலாம்

மதிப்புமிகு போதகர் ஐயா,

வணக்கம் “நீங்களும் திறப்பின் வாசலைச் சந்திக்கலாம்” குறுவட்டு கண்டு கேட்டு மகிழ்ந்தேன்.  பலமுறைகள் பார்த்து கேட்டுப் பயன் பெற வேண்டிய அற்புதமான பதிவுகள்! காண் ஒலி காட்சிப் பதிவு அருமை! விஷால், “நான் தகுதி உள்ளவனா?” என்று கேட்டுப் பேசும் போது எனது கண்களும் கலங்கின.

விறுவிறுப்பாக அனுபவப்பதிவுகள் நகர்ந்து வியப்பில் ஆழ்த்தின.

“கண்டவர் சொன்னதில்லை! சொன்னவர் பார்த்ததில்லை” என்பதை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டு விட்ட சாட்சிகளின் காட்சிகள்! எனக்கு (எங்களுக்கு) அந்த நற்பேறு வாய்க்கப் போதகர் வழி செய்யமாட்டாரா?  என்னும் கேள்வி எனது மனதில் எஞ்சுகிறது.  என் கேள்விக்கு என்ன – எப்போது பதில் என்கிற ஆதங்கத்துடன் முடிக்கிறேன்.  உங்களது தயாரிப்புகளில் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் உச்சம் தொடும் சிறப்பு உண்டு இதற்கு!

கிறிஸ்து அன்பன் அ. அந்தோணி குருசு, உறையூர்.